இரத்தத்தில் உள்ள சிகப்பு அணுக்களிலுள்ள ஹுமோக்ளோபின் அளவு குறைந்து போனால் இரத்த சோகை ( ANEMIA ) எனப்படுகிறது .
நூறு மைக்ரோ லிட்டர் இரத்த அளவில் குறைந்தது 11 கிராம் ஹுமோ குளோபின் இருக்க வேண்டும் .இதற்க்குக் குறைவாக இருந்தால் இரத்த சோகை எனப்படும் .
இரும்புச் சத்து , போலிக் அமிலம் , வைட்டமின் B12 ,புரதம் ஆகியவை போதுமான அளவு இல்லாவிட்டால் இரத்த சோகை ஏற்படும் .
உணவே மருந்து :
கீரை,இலைகள் நிறைந்த காய்கறிகள் ,வெங்காயம் , கிழங்கு , பெயரீட்சை , வெல்லம் , ஆகியவற்றில் இரும்புச் சத்து உள்ளது .
பழங்கள் , கீரைகள் ,காய்கறிகளில் போலிக் அமிலம் உள்ளது .
பருப்புகள் , சோயா பீன்ஸ் , கடலை , கொத்துக்கடலை ,பால்,பார்லி பொருட்கள் ஆகியவற்றிலிருந்து புரதம் கிடைக்கிறது .
முட்டை , இறைச்சி , ஈரல் ஆகியவற்றில் புரதம் மற்றும் இரும்புச் சத்து கிடைக்கிறது .





கருத்துரையிடுக
கருத்துரையிடுக